உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மீனவர் வலையில் தந்தம் கலெக்டரிடம் ஒப்படைப்பு

மீனவர் வலையில் தந்தம் கலெக்டரிடம் ஒப்படைப்பு

காரைக்கால்:காரைக்காலில் மீனவர் வலையில் சிக்கிய யானை தந்தத்தை கலெக்டரிடம் ஒப்படைத்தனர்.காரைக்கால் அடுத்த கிளிஞ்சல்மேட்டை சேர்ந்த 10 மீனவர்கள், தாமரைச்செல்வன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 31ம் தேதி காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். கடலில் வீசிய வலையை திரும்ப இழுத்து பார்த்தபோது, அதில் யானை தந்தம் இருந்ததை கண்டு ஆச்சரியமடைந்தனர். தொடர்ந்து அதனை நேற்று கிளிஞ்சல்மேடு மீனவ பஞ்சாயத்தார்கள், கலெக்டர் மணிகண்டனிடம் ஒப்படைத்தனர். தந்தத்தை பெற்ற கலெக்டர் அதனை துணை கலெக்டர் ஜான்சனிடம் கொடுத்து, முறைப்படி வனத்துறையில் ஒப்படைக்க அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை