உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு பள்ளியில் சுதந்திர தின விழா

அரசு பள்ளியில் சுதந்திர தின விழா

புதுச்சேரி: கருவடிக்குப்பம் அரசு தொடக்கப்பள்ளியில் சுதந்திர தின விழா நடந்தது.தலைமை ஆசிரியர் இளங்கோவன் தலைமை தாங்கினார். ஆசிரியை நிர்மலா தேவி முன்னிலை வகித்தார். முன்னாள் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் சசிக்குமார், பள்ளியில் தேசியக்கொடி ஏற்றினார். சிறப்பு விருந்தினராக, இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் சண்முகநாதன் கலந்து கொண்டார்.முன்னாள் மாணவர் செந்தில்குமார் மாணவர்களின் கல்விக்காக, டிவி., வழங்கினார். விழா ஏற்பாடுகளை ஆசிரியைகள், விஜயலட்சுமி, பத்மாவதி, கிரிதரணி, சரண்யா, ராஜேஸ்வரி, சங்கீதா மற்றும் ஆசிரியர் பழனி மேற்கொண்டனர். பெற்றோர் ஆசிரிய சங்க தலைவி அனிதா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்