உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கடற்கரை சாலையில் சுதந்திர தின விழா

கடற்கரை சாலையில் சுதந்திர தின விழா

புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரைசாலையில் இன்று நடக்கும் சுதந்திர தின விழாவில், முதல்வர் ரங்கசாமி தேசிய கொடி ஏற்றுகிறார்.நாட்டின் 78வது சுதந்திர தின விழா புதுச்சேரி அரசு சார்பில் இன்று கடற்கரை சாலையில் நடக்கிறது. முதல்வர் ரங்கசாமி காலை 9:00 மணிக்கு தேசிய கொடி ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு சுதந்திர தின விழா உரையாற்றுகிறார். தொடர்ந்து, போலீஸ், ஐ.ஆர்.பி.என்., தீயணைப்பு, முன்னாள் ராணுவம், என்.சி.சி., மாணவ மாணவி களின் அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. சிறந்த அணிவகுப்பு, கலை குழுவினருக்கு விருதுகள் வழங்கப்படும்.சுதந்திர தின விழாவையொட்டி கடற்கரை சாலை மற்றும் அதனையொட்டிய சாலைகளில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ