உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வில்லியனுார் தொகுதியில் 14 பேருக்கு வீடு கட்ட தவணைத் தொகை

வில்லியனுார் தொகுதியில் 14 பேருக்கு வீடு கட்ட தவணைத் தொகை

புதுச்சேரி: வில்லியனுார் தொகுதியில், 14 பயனாளிகளுக்கு கல் வீடு கட்டுவதற்கான, முதல்கட்ட தவணைத்தொகையை, எதிர்க்கட்சித்தலைவர் சிவா வழங்கினார். புதுச்சேரி அரசு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம், வில்லியனூர் தொகுதியை சேர்ந்த 14 பயனாளிகளுக்கு கல் வீடு கட்டுவதற்கு முதல் கட்ட தவணையாக ஒரு நபருக்கு, ரூ.2.20 ஆயிரம் வீதம், மொத்தம் ரூ.30.80 லட்சம், அவரவர் வங்கி கணக்கில், செலுத்துவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி, வில்லியனுார் சட்டசபை அலுவலகத்தில் நடந்தது.இதில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், தி.மு.க தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, செல்வநாதன், தர்மராஜ், அவைத் தலைவர் ஜலால் அணிப், இலக்கிய அணி அமைப்பாளர் சீனு மோகன்தாசு உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை