உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஐ.டி.ஐ., படிப்பு: நேரடி சேர்க்கை

ஐ.டி.ஐ., படிப்பு: நேரடி சேர்க்கை

புதுச்சேரி: மேட்டுப்பாளையம் அரசு ஆண்கள் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் அழகானந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:மேட்டுப்பாளையம், வம்பாகீரப்பாளையம், வில்லியனுார், பாகூர், நெட்டப்பாக்கம் தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கை நடக்கிறது. சேர விரும்பும் மாணவர்கள் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை நேரில் சந்தித்து உடனடி சேர்க்கை பெறலாம். முதலில் வரும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்த உடனடி சேர்க்கை வரும் 30ம் தேதி வரை நடைபெறும். தொழிற்பயிற்சி பெறும் மாணவர்களுக்கு இலவச சீருடை, மதிய உணவு, மாதந்தோறும் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ