| ADDED : மே 23, 2024 05:38 AM
புதுச்சேரி : கந்தர் சஷ்டி பாராயணக் குழு சார்பில் கந்த சஷ்டி பாராயணம் நடந்தது.முருகரின் அவதார நட்சத்திரமான வைகாசி விசாகத்தை முன்னிட்டு, தட்டாஞ்சாவடியில் அமைந்துள்ள குண்டுதாங்கி அய்யனாரப்பன் கோவிலில், முருகப்பெருமானுக்கு கந்த சஷ்டி பாராயணம் நேற்று நடந்தது. பாராயணத்தை, கந்தர் சஷ்டி பாராயணம் குழு சிறப்பு தலைவர் சீனு மோகன்தாஸ் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் முருகபாபுஜி, அருள்செல்வம், குண்டுதாங்கி அய்யனாரப்பன் கோவில் நிர்வாகிகள் மற்றும் கந்த சஷ்டி பாராயணக் குழுவினர் கலந்து கொண்டனர்.முன்னதாக, முருகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகளும், அர்ச்சனை மற்றும் தீபாராதனை நடந்தது. நிகழ்வின் நிறைவில், 500 பேருக்கு, தலைவாழை இலை போட்டு வடை பாயசத்தோடு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.