உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு

தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு

வில்லியனுார் : வில்லியனுார் கொம்யூன் அளவில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்த மாணவர்கள் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.வில்லியனுார் கொம்யூன் தன்னார்வல அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில், நடந்த விழாவிற்கு, கல்வெட்டு ஆய்வாளர் வேங்கடேசன், முன்னாள் முதன்மை கல்வி அலுவலர் மீனாட்சிசுந்தரம் ஆகியோர் தலைமை தாங்கினர். ராம சிரவராஜன், வக்கீல் சண்முகம் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் பாலசுந்தரம் வரவேற்றார்.தன்னார்வ அமைப்பின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அருள்ஜோதி நோக்க உரையாற்றினார். எஸ்.பி., மோகன்குமார், புதுச்சேரி பல்கலைக்கழக உதவி பேராசியர் இளங்கோவன் ஆகியோர் சாதனை மாணவர்களை பாராட்டி, கவுரவப்படுத்தினர்.விழாவில் ரமேஷ், நிர்வாகிகள் திருமுருகன், சேகர், வெங்கடேசன், மணிகண்டன், சரவணன், ராஜசேகர், காதர் மொய்தீன், ஆறுமுகம், குணாளன், விஜயரங்கன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை