உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பள்ளிச்சேரி கோவிலில் இன்று கும்பாபிேஷகம்

பள்ளிச்சேரி கோவிலில் இன்று கும்பாபிேஷகம்

புதுச்சேரி: விழுப்புரம் மாவட்டம், பள்ளிச்சேரி கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவில் கும்பாபிேஷகம் இன்று நடக்கிறது.அதனையொட்டி நேற்று முன்தினம் மாலை முதல் கால பூஜை நடந்தது. நேற்று காலை புண்ணியாஹவாசம், விசேஷ சந்தி, இரண்டாம் கால யாக பூஜை, மாலை மூன்றாம் கால யாக பூஜை நடந்தது.இன்று 21ம் தேதி காலை நான்காம் காலயாக பூஜையை தொடர்ந்து காலை 8:45 மணிக்கு கொழுவேறியம்மன், நவசக்தி, ஆஞ்சநேயர் கும்பாபிேஷகம், 9:15 மணிக்கு பூரணி பொற்கலை சமேத அய்யனாரப்பன் கும்பாபிேஷகம், 9:30 மணிக்கு முத்துமாரியம்மன், 9:40 மணிக்கு திரவுபதியம்மன், 9:45 மணிக்கு திரவுபதியம்மன் மூலவர், பரிவார மூர்திகளுக்கு கும்பாபிேஷகம் நடக்கிறது. இரவு 9.00 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை