| ADDED : ஜூன் 26, 2024 10:58 PM
திருக்கனுார்: சோரப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில், ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மலேரியா எதிர்ப்பு மாத விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது.பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். ஆசிரியர் மாணிக்கவேலு வரவேற்றார். சோரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் குணசீலன் கலந்து கொண்டு மலேரியா நோய் தொற்று மற்றும் அதனை தடுக்கும் வழிமுறைகள் பற்றி மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார்.தொடர்ந்து, மலேரியா எதிர்ப்பு மாத விழிப்புணர்வு ஊர்வலத்தை மருத்துவர் குணசீலன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். உடற்கல்வி ஆசிரியர் செல்வகுமரன், சுகாதார உதவியாளர் காசிமுனியன், ஆசிரியர்கள் விஜெஷ், ஏஞ்சல் மேரி, சடகோபன், சூரியகுமாரி, ராஜேந்திரன், மோகன், வேலவன், பள்ளி நுாலகர் லட்சுமணன், அலுவலக ஊழியர் மாவீரன், கணினி பயிற்றுனர் மதுபாலன் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.மாணவர்கள் பங்கேற்ற ஊர்வலம் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பொதுமக்களிடையே மலேரியா நோய் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.