உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பார் கேஷியரை  தாக்கியவர் கைது

பார் கேஷியரை  தாக்கியவர் கைது

அரியாங்கப்பம் : அரியாங்குப்பத்தில், போதையில் பார் கேஷியரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.வீராம்பட்டினம் செல்லும் சாலை காக்கையான்தோப்பு பகுதியில், தனியார் ரெஸ்டோ மது பார் உள்ளது. அங்கு அரியாங்குப்பம் அந்தோனியார் கோவில் தெருவை சேர்ந்த ராஜேஷ், தனது நண்பர்கள் 2 பேருடன் பாரில் நேற்று மது குடிக்க வந்தனர்.பணம் தராமல் 3 பேரும் சேர்ந்து மது கேட்டனர். பணம் இல்லாமல் மது பாட்டில்களை தர மறுத்த கேஷியர் தியாகுவை, அவர்கள் ஆபாசமாக திட்டி, அவரை தாக்கி விட்டு கொலை மிரட்டல் விடுத்தனர்.பார் உரிமையாளர் உத்தரவேல் கொடுத்த புகாரின் பேரில், அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர், கதிரேசன் வழக்கு பதிந்து, ராஜேைஷ கைது செய்தனர். மற்ற இருவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்