| ADDED : ஆக 16, 2024 05:51 AM
காரைக்கால்: காரைக்காலில் அரசு சார்பில் நடந்த சுதந்திரதின விழாவில் அமைச்சர் திருமுருகன் தேசிய கொடி ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.காரைக்கால் அரசு சார்பில் நேற்று 78வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. புறவழிச்சாலை உள்விளையாட்டு மைதானத்தில் நடந்த விழாவில் குடிமைப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் திருமுருகன் நேற்று காலை 9.10மணிக்கு தேசிய கொடி ஏற்றி காவல்துறையின் அணிவகுப்பு மறியாதையை ஏற்றுக்கொண்டு சிறப்புரையாற்றினார்.பின்னர் அமைச்சர், கலெக்டர் ஆகியோர் பலுனை வானில் பறக்கவிட்டு சமாதானத்தை வெளிப்படுத்தினர்.பின் காவல்துறை அணிவகுப்பு மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.பின்னர் அமைச்சர் திருமுருகன் காரைக்காலில் செயல்படுத்தப்பட்டு வரும் முக்கிய திட்டங்கள் குறித்து பேசினார். தொடர்ந்து தியாகிகள் கவுரவிக்கப்பட்டனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பில் முதலிடம் பெற்ற அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. பல்வேறு துறையில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கும் விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.மேலும் அணிவகுப்பு மரியாதையில் சிறப்பிடம் பெற்ற காவல் துறைக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் கலெக்டர் மணிகண்டன், சீனியர் எஸ்.பி., மனீஷ், மாவட்ட துணை கலெக்டர் ஜான்சன், எஸ்.பி.,க்கள் சுப்ரமணியன், பாலச்சந்தர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், உட்பட பலர் கலந்துகொண்டனர்.