மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
2 hour(s) ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
2 hour(s) ago
புதிய தெரு மின் விளக்கு எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
2 hour(s) ago
புதுச்சேரி : முன்னாள் கவர்னர் தமிழிசை அவதுாறு பேச்சு களை நிறுத்திக் கொள்ள வேண்டும் என காங்., சட்டசபை தலைவர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:முன்னாள் கவர்னர் தமிழிசை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து மக்களால் தேர்தெடுக்கப்பட்ட எம்.பி.,க்களை இழிவாக பேசியுள்ளார். லோக்சபா தேர்தலில் இவருக்கு ஏற்பட்ட தோல்வி இவரை இப்படி பேச வைக்கிறது. இங்கிருந்து சென்ற இந்தியா கூட்டணியின் 40 எம்.பிக்கள்., தான் வலிமையான எதிர்க்கட்சிக்கு துாண்களாக திகழ்கின்றனர்.எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி, அதிகாரத்தை விட உண்மைதான் சக்தி வாய்ந்தது என்றும், நாட்டிற்கு அநீதி இழைக்கப்படும் போது, இந்தியா கூட்டணியின் எம்.பி.,க்கள் உண்மையை ஓங்கி உரைப்பார்கள் என்றார். எதிர்கட்சிகளின் கோரிக்கைகளை, நாங்கள் காது கொடுத்தும் கேட்க மாட்டோம்.எந்த நலத்திட்டங்களை யும் செய்துகொடுக்க மாட் டோம் என்று பிரதமர் மோடி, முன்னாள் கவர்னர் தமிழிசையிடம் சொன்னாரா என்பது தெரியவில்லை.இந்தியா கூட்ட ணியின் எம்.பி.,க்கள் மக்களின் நலனுக்காக பாடுபடக் கூடியவர்கள் தங்களுடைய நலனுக்காக கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்துபவர்கள் அல்லர் என்பதை முன்னாள் கவர்னர் தமிழிசை புரிந்து கொண்டு இது போன்ற அவதூறான பேச்சுக்களை நிறுத்திக்கொள்ள வேண்டும் என காங்., சார்பில் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம்.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago