உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 2 குழந்தைகளின் தாய் மாயம் 

2 குழந்தைகளின் தாய் மாயம் 

புதுச்சேரி : வில்லியனுார் அடுத்த ராமநாதபுரம் மாஞ்சாலை வீதியைச் சேர்ந்தவர் பிரபு 37, தனியார் கம்பெனி ஊழியர். இவரது மனைவி லட்சுமி 32.இவர்களுக்கு கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது. தம்பதிகளுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் கடந்த 14ம் தேதி மதியம்2 மணியளவில் லட்சுமி கோட்டக்குப்பத்தில் உள்ள அவரது அம்மா வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அவர் அம்மா வீட்டிற்கு செல்லவில்லை. பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ