உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 5 பேரிடம் ரூ.67 ஆயிரம் ரூபாய்மோசடி செய்த கும்பலுக்கு வலை

5 பேரிடம் ரூ.67 ஆயிரம் ரூபாய்மோசடி செய்த கும்பலுக்கு வலை

புதுச்சேரி: புதுச்சேரியில் 5 பேரிடம் 67 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த மர்ம கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மோனிஷா தேவி, இவரை தொடர்பு கொண்ட மர்ம நபர், வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறினார். அதையடுத்து, 30 ஆயிரம் ரூபாயை முதலீடு செய்து ஏமாந்தார்.அதே போல, பிள்ளையார்குப்பத்தை சேர்ந்த சவுமியா, இவரின் தந்தையை தொடர்பு கொண்ட மர்ம நபர், தவறுதலாக பணம் அனுப்பி விட்டதாக கூறினார். அதை நம்பி, அவர் வங்கி கணக்கை சரியாக பார்க்காமல் ரூ.8 ஆயிரம் பணத்தை அனுப்பி ஏமாந்தார்.தொடந்து, தேங்காய்த்திட்டை சேர்ந்தவர் அருள். இவரது வங்கி கணக்கில் இருந்து இவருக்கு தெரியாமல் 19 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டது. அதே போல, பெரியகாலாப்பட்டு பகுதியை சேர்ந்த சரண்யா என்பவரிடம் வங்கி கணக்கில் இருந்து 5 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டது.கதிர்காமம் பகுதியை சேர்ந்த தேவா என்பவரை மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு ஆன்லைன் மூலம் அதிகம் பணம் சம்பாதிக்கலாம் என கூறினார். அதையடுத்து, அவர் 5 ஆயிரம் பணம் முதலீடு செய்து ஏமாந்தார். இதுகுறித்து, 5 பேர் புகாரின் பேரில் நேற்று சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம கும்பலை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை