உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தற்காலிக பஸ்டாண்டில் வசதிகள் ஓம்சக்தி சேகர் கோரிக்கை

தற்காலிக பஸ்டாண்டில் வசதிகள் ஓம்சக்தி சேகர் கோரிக்கை

புதுச்சேரி: ஏ.எப்.டி., தற்காலிக பஸ்டாண்டில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என, அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர், முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:ஏ.எப்.டி., மைதானத்தில், தற்காலிக பஸ்டாண்டு முன்னேற்பாடும் இல்லாமல் அவசர கதியில் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளது. அங்கு வரும் பயணிகள் சொல்ல முடியாத இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். முறையாக கழிப்பிட வசதி உட்பட அடிப்படை வசதிகள் இல்லை.பஸ்கள் நிற்கும் இடத்தை அறியும் வகையில் ஊர் பெயர் பலகைகள், அறிவிப்புகள் சரியான முறையில் அமைக்கப்படவில்லை. கண்காணிப்பு கேமராக்கள் குறைந்த அளவிலேயே உள்ளன. புதுச்சேரி மற்றும் வெளி மாநில போக்குவரத்து கழகங்களுக்கு தற்காலிக கூரை அமைக்கப்பட்டுள்ளது.அது போதிய வசதியாக இல்லை. குறிப்பாக ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில் வெளியூர் செல்லும் புதுச்சேரி பயணிகள் மிகுந்த இன்னல்களை சந்திக்கின்றனர். வெளியூர் பயணிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.ஆனால், சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாக அதிகாரிகள், பயணிகள் அதிகம் செல்லும் நாட்களில் கூட குறைந்தபட்ச ஆய்வு கூட செய்யாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. எனவே, தற்காலிக பஸ்டாண்ட் விஷயத்தில் முதல்வர் தனி கவனம் செலுத்த வேண்டும்.தற்காலிக பஸ்டாண்டாக இருந்தாலும் அதில் உரிய அடிப்படை வசதிகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். பயணிகளின் இன்னல்களை போக்க ஒரு தனி அரசு அதிகாரியை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை