உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வேளாங்கண்ணி செல்ல 29ம் தேதி பி.ஆர்.டி.சி., சிறப்பு பஸ் இயக்கம்

வேளாங்கண்ணி செல்ல 29ம் தேதி பி.ஆர்.டி.சி., சிறப்பு பஸ் இயக்கம்

புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து வேளாங்கண்ணி செல்ல வரும் 29ம் தேதி பி.ஆர்.டி.சி., சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது.வேளாங்கண்ணி மாதா கோவிலில் கொடியேற்று விழா வரும் 29 தேதி விமர்சையாக நடக்க உள்ளது. இதை முன்னிட்டு புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் சார்பில் பி.ஆர்.டி.சி., சிறப்பு பஸ் ஒன்று பக்தர்களுக்காக வேளாங்கண்ணிற்கு முன்பதிவுடன் இயக்கப்பட உள்ளது.இந்த சிறப்பு பஸ் 29ம் தேதி காலை 10:00 மணிக்கு புதுச்சேரியில் புறப்பட்டு மதியம் 2:15 மணியளவில் வேளாங்கண்ணி சென்று அடையும். பின் இந்த பஸ் வேளாங்கண்ணியிலேயே காத்திருந்து கொடியேற்று விழா முடிந்தவுடன் அன்று இரவு 8:00 மணிக்கு முன்பதிவு செய்த பயணிகளை ஏற்றிக்கொண்டு மீண்டும் புதுச்சேரி வந்தடையும்.இந்த சிறப்பு பஸ்சில் புதுச்சேரியில் இருந்து வேளாங்கண்ணிக்கு செல்ல 250 ரூபாய், புதுச்சேரி திரும்ப 250 ரூபாய் என, மொத்தம் 500 முன்பதிவுடன் கட்டணம் வசூலிக்கப்படும். புதுச்சேரியில் இருந்து வேளாங்கண்ணி சென்று வர விரும்பும் பயணிகள் இன்று 23ம் தேதி மாலை முதல் புதுச்சேரி காரைக்கால் பஸ் நிலையத்தில் உள்ள பி.ஆர்.டி.சி., பயணச்சீட்டு முன்பதிவு மையம் மற்றும் பஸ் இண்டியா ஆப் செயலி வழியாக முன் பதிவு செய்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை