| ADDED : ஆக 05, 2024 09:56 PM
நெட்டப்பாக்கம் : வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் இயற்கை விவசாயத்தில் பாரம்பரிய நெல் சாகுபடி ஊக்குவித்தல் பயிற்சி முகாம் நடந்தது.கரையாம்புத்துார் உழவர் உதவியகம் அலுவகத்தில் நடந்த முகாமிற்கு, பாகூர் கோட்ட துணை வேளாண் இயக்குனர் குமரவேலு தலைமை தாங்கினார். வேளாண் அலுவலர் புவனேஸ்வரி வரவேற்றார். காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம் முதல்வர் விஜயகுமார் நெல் சாகுபடியில் ராசாயன மருந்துகள் பயன்படுத்தாமல், பாரம் பரிய முறையில் நெல்சாகுபடி செய்வது குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார்.முகாமில் சீரகா சம்பா, மாப்பிள்ளை சம்பா, கருங்குவலி, வெள்ளப்பொன்னி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் விதைகள் விவசாயிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டது. சுற்றுப்புற கிராம விவசாயிகள் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் கங்காதுரை செய்திருந்தார். ஆத்மா திட்ட மேலாளர் பக்தவச்சலம் நன்றி கூறினார்.