உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வலிப்பு ஏற்பட்டு பெயிண்டர் சாவு

வலிப்பு ஏற்பட்டு பெயிண்டர் சாவு

அரியாங்குப்பம் : முதலியார்பேட்டை, ரோடியார் மில் வீதியை சேர்ந்தவர் சிவக்குமார் (எ) சித்திரன், 48; பெயிண்டர். அடிக்கடி மது குடித்து வந்தார். இதனிடையே அவருக்கு வலிப்பு நோய் இருந்து வந்தது.இந்நிலையில், நேற்று முன்தினம், முதலியார்பேட்டை அப்துால் கலாம் நகர் வழியாக நடந்து சென்ற போது, வலிப்பு வந்து கீழே விழுந்தார்.அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை