உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முகாம் நேரத்தை மாற்ற ஓய்வூதியர்கள் கோரிக்கை

முகாம் நேரத்தை மாற்ற ஓய்வூதியர்கள் கோரிக்கை

புதுச்சேரி: வெயில் காரணமாக ஓய்வூதியதாரர்களுக்கு நடத்தப்படும் முகாம் நேரத்தை மாற்றி அமைக்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து சங்க நிறுவனர் தாமோதரன் தெரிவித்ததாவது:புதுச்சேரியில் ஓய்வூதியதாரர்கள் உயிருடன் இருப்பதற்கான, ஆதார சான்றிதழை நேரில் அல்லது வேறு முறைகளை பின்பற்றி வரும் மே மாதம், 2ம் தேதி முதல் 31,ம் தேதி வரை, வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.குறிப்பிட்ட தேதிகளில், காலை 9:30 மணி முதல், 12:30 மணி வரை மற்றும் மதியம் 2:30 மணி முதல் 4:30 மணி வரை முகாம் நடக்க உள்ளது. தற்போது கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. வரும் மே 4,ம் தேதி முதல் கத்தரி வெயில் துவங்கி 28,ம் தேதி வரை நீடிக்கிறது. இதனால் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் வயதான ஓய்வூதியதாரர்களின் உடல் நலனையும் கருத்தில் கொண்டு, இந்த முகாமை, அறிவிக்கப்பட்ட அதே தேதியில் காலை 7:00 மணி முதல், காலை 11:00 மணி வரையிலும், மாலை 3:00 மணி முதல் 6:00 மணி வரை நடத்தினால், நன்றாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை