உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தீவனம் சாப்பிட்ட கன்று குட்டி உயிரிழப்பு  போலீசார் வழக்கு பதிவு

தீவனம் சாப்பிட்ட கன்று குட்டி உயிரிழப்பு  போலீசார் வழக்கு பதிவு

புதுச்சேரி : கேதுமை தவிடு, மாட்டு தீவனம் சாப்பிட்ட கன்று குட்டி வயிறு வீங்கி இறந்தது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி பீச்சைவீரன் பேட், ஆதிதிராவிடர் மேம்பாட்டு கழக குடியிருப்பைச் சேர்ந்தவர் பரசுராமன், 54; ஆட்டோ டிரைவர். இவரது வீட்டில் 3 பசுமாடுகள், 2 கன்று குட்டிகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் வில்லியனுார் ஒதியம்பட்டு ரோடு, கனுவாபேட் அருகில் உள்ள கடையில் கோதுமை தவிடு மற்றும் கலப்பு தீவனம் வாங்கி வந்து, மாடுகள் மற்றும் கன்று குட்டிகளுக்கு கொடுத்தார்.அதை சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் ஒரு வயது உடைய கன்று குட்டி நுரை தள்ளி வயிறு வீங்கி இறந்தது. மாட்டு தீவனத்தில் விஷத்தன்மை கொண்ட பொருள் கலந்திருந்ததால் தனது கன்று குட்டி இறந்ததாக பரசுராமன் ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து, இறந்த கன்று குட்டியை பிரேத பரிசோதனை செய்து ஒப்படைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை