உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஏழை மாரியம்மன் கோவில் செடல் உற்சவம் துவங்கியது

ஏழை மாரியம்மன் கோவில் செடல் உற்சவம் துவங்கியது

வில்லியனுார்: வில்லியனுார் மார்க்கெட் வீதியில் உள்ள தேவி ஏழை மாரியம்மன் கோவிலில் 96ம் ஆண்டு செடல் உற்சவம் நேற்று காலை கணபதி ேஹாமத்துடன் துவங்கியது.இன்று இரவு 8:30 மணியளவில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 16ம் தேதி மகிஷாசுரமர்த்தினி விழா, 18ம் தேதி பாரிவேட்டை, 19ம் தேதி அரங்கர் அனந்தசயனம் விழா, 22ம் தேதி முப்பல்லக்கு விழா நடக்கிறது.23ம் தேதி மாலை செடல் உற்சவம் நடக்கிறது. அதையொட்டி, காலை சிறப்பு அபிேஷகம், காலை 11: 00 மணிக்கு மேல் சாகை வார்த்தல், மாலை 4:00 மணிக்கு மேல் செடல் உற்சவம் நடக்கிறது. 24ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா, 25ம் தேதி ஊஞ்சல் உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது. தினசரி காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை, இரவு 7:00 மணிக்கு மேல் அலங்கரிக்கப்பட்ட சுவாமி வீதியுலா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ