மேலும் செய்திகள்
கவர்னர், முதல்வர் புத்தாண்டு வாழ்த்து
1 hour(s) ago
போலீசாரை கண்டித்து வில்லியனுாரில் ஆர்ப்பாட்டம்
1 hour(s) ago
பைக் திருட்டு
1 hour(s) ago
சிறை கைதியிடம் போன் பறிமுதல்
1 hour(s) ago
புதுச்சேரி: முதல்வர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களுக்கு, தனது நிலத்தில் விளைந்த பலாப்பழங்களை, கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., வழங்கினார்.காலாப்பட்டு தொகுதி பா.ஜ., எம்.எல்.ஏ., கல்யாணசுந்தரத்துக்கு, புதுச்சேரி விமான நிலையம் அருகில் 30 ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு மா, பலா, வாழை, தென்னை, முந்திரி போன்றவற்றை பயிரிட்டுள்ளார்.தற்போது, பலாப்பழ சீசன் களை கட்டி உள்ளது. தனது நிலத்தில் விளைந்த பலாப்பழங்களை, முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கும், நண்பர்களுக்கும் வழங்குவது கல்யாணசுந்தரத்தின் வழக்கம். கடந்த 2011ம் ஆண்டு என்.ஆர். காங்., எம்.எல்.ஏ.,வாக முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து பலாப்பழங்களை அன்பு பரிசாக கல்யாணசுந்தரம் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இதன்படி, 14வது ஆண்டாக பலாப்பழங்களை நேற்று வழங்கினார்.பழுத்து கனிந்த பிரமாண்டமான பலாப்பழங்களுடன் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., நேற்று மதியம் சட்டசபையில் உள்ள முதல்வர் அலுவலகத்துக்கு வந்தார். முதல்வர் ரங்கசாமியிடம் பலாப்பழங்களை வழங்க, பெரிய சைஸ் பலாவை வியப்புடன் பார்த்தவாறு புன்சிரிப்புடன் பெற்று கொண்டார். தொடர்ந்து, சபாநாயகர், அமைச்சர்களுக்கு பலாப்பழங்களை வழங்கினார். இதுகுறித்து கல்யாணசுந்தரம் கூறும்போது, 'எனது நிலத்தில் விளைந்த பலாப்பழங்களை அன்பு பரிசாக வழங்கி வருகிறேன். இயற்கையான முறையில் மருந்து தெளிக்காத பழம் என்பதால் இதன் சுவையும், மணமும் அதிகம்' என்றார்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago