உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காரைக்கால் சிறையில் கைதிகள் மோதல்

காரைக்கால் சிறையில் கைதிகள் மோதல்

காரைக்கால் : காரைக்கால் சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் கைதி ஒருவர் காயமடைந்தார். காரைக்கால், மதகடி பகுதியில் கிளை சிறை உள்ளது. இங்கு கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு சம்பவத்தில் ஈடுப்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் 50க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.இதில், போக்சோ வழக்கில் 10 ஆண்டுகள் தண்டனை பெற்ற காரைக்கால், நிரவி, கருக்களாச்சேரி பகுதியை சேர்ந்த ஆறுமுகம், 48, என்பவரும், கொலை வழக்கில் தொடர்பில் உள்ள புதுச்சேரி, வில்லியனுார், பொறையூர் பேட் பகுதியை சேர்ந்த பிரதிஷ், 22, என்பவரும் சிறையில் சமையல் செய்வது வழக்கம். நேற்று வழக்கம் போல் சமையல் அறையில் ஆறுமுகம் கஞ்சி காய்ச்சிக் கொண்டிருந்த போது, பிரதிஷ் பொட்டுக்கடலை துவையல் செய்தார். அதில், தண்ணீரை ஊற்றியது யார் என, ஆறுமுகத்திடம் பிரதிஷ் கோட்டதால் இருவருக்கு தகராறு ஏற்பட்டது. அத்திரமடைந்த பிரதிஷ் கிச்சனில் தேங்காய் உடைக்கு அறிவாளால் ஆறுமுகத்தை நான்கு இடங்களில் வெட்டினார்.படுகாயம் அடைந்த ஆறுமுகத்தை சிறை அதிகாரிகள் மீட்டு, அரசு மருந்துவமனையில் சேர்த்தனர். இதுக்குறித்த புகாரின் பேரில், பிரதிஷ் மீது நகர காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் சிறையில் பரப்பரப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ