உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு ஓய்வு பெற்ற நீதிபதி நியமிக்க வேண்டும் :அங்காளன் எம்.எல்.ஏ., கோரிக்கை 

பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு ஓய்வு பெற்ற நீதிபதி நியமிக்க வேண்டும் :அங்காளன் எம்.எல்.ஏ., கோரிக்கை 

புதுச்சேரி: பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும் என அங்காளன் எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்தார். புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் அங்காளன் எம்.எல்.ஏ., பேசியதாவது:மாநிலத்தின் கடன் தள்ளுபடிக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ரயில்பாதை உள்ளிட்ட மத்திய அரசு திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கோவில் நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் தர வேண்டும். அளவுக்கு அதிகமான ஆட்களை நியமனம் செய்தது, பணம் கையாடல் செய்ததால் பல அரசு சார்பு நிறுவனங்கள் மூடப்பட்டு ஊழியர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. ஆதிதிராவிடர் மக்கள் வாழ்வாதாரத்திற்கு சிறு குறு தொழில் துவங்க கடன் உதவி அளிக்க வேண்டும். கல்வி மற்றும் மருத்துவ துறையில் அரசு கவனம் செலுத்த வேண்டும். முதலியார், கருணிகர் சமூகத்தினரை ஓ.பி.சி., பட்டியலில் சேர்க்க முதலில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும். குடிமைப் பொருள் வழங்கல் துறையில் சம்பளத்திற்கென்று ரூ.1.75 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஒரு ஆண்டுக்கு சம்பளம் வழங்க ரூ.9 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ரேஷன் கடை ஊழியர்களை பல்நோக்கு உதவியாளராக பணிநிரந்தரம் செய்து அவர்களது வேலைக்கு உத்தரவாதம் செய்து தர வேண்டும்.பட்ஜெட்டில் மாநில வளர்ச்சிக்கான திட்டங்கள் இல்லை. எனவே, மாநில வளர்ச்சி, மக்கள் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ