உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரூ.7.5 லட்சம் பறிமுதல்; இருவரிடம் விசாரணை

ரூ.7.5 லட்சம் பறிமுதல்; இருவரிடம் விசாரணை

புதுச்சேரி : புதுச்சேரியில், தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று இரவு உதவி தேர்தல் அதிகாரி மகேந்திரன் தலைமையிலான பறக்கும்படையினர் ராஜிவ்காந்தி குழந்தைகள் மருத்துவமனை அருகே உள்ள ஏ.டி.எம்., வாசலில் மஞ்சள் நிற பையுடன் நின்ற இருவரை பிடித்து விசாரித்தனர்.அவர்கள் அரியாங்குப்பத்தை சேர்ந்த சக்திவேல்,49; திருவண்ணாமலையை சேர்ந்த சங்கர்,34; என்பதும், அவர்கள் வைத்திருந்த துணி பையில் ரூ.,7.5 லட்சம் பணம் இருந்தது. அதற்கான ஆவணம் இல்லை. அதனையொட்டி பணத்தை பறிமுதல் செய்த பறக்கும்படையினர், இருவரையும் உருளையன்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ