உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காரைக்காலில் கலெக்டர் முன்னிலையில் தேசியக்கொடி ஏற்றிய துாய்மை பணியாளர்

காரைக்காலில் கலெக்டர் முன்னிலையில் தேசியக்கொடி ஏற்றிய துாய்மை பணியாளர்

காரைக்கால்: காரைக்கால் காமராஜர் வளாகத்தில் தேசிய கொடியை நகராட்சி துாய்மை பணியாளர் ஏற்றிவைத்தார்.காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் வளாகத்தில் மூத்த அரசு அதிகாரிகள் தேசிய கொடியை ஏற்றுவது வழக்கம்.இந்நிலையில் நேற்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட கலெக்டர் மணிகண்டன் பரிந்துரையின் பேரில் நகராட்சி துாய்மை பணியாளர் சரோஜா தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். கலெக்டர் மணிகண்டன் உட்பட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.சமுதாயத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் அவர்களை ஊக்குவிக்கவும் ஒரு முன்னுதாரணமாக இது அமையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை