உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கஞ்சா விற்பனை: 2 வாலிபர்கள் கைது 

கஞ்சா விற்பனை: 2 வாலிபர்கள் கைது 

பாகூர் : பாகூரில் கஞ்சா விற்ற இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். பாகூர் பகுதியில் கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின் பேரில், போதை பொருள் தடுப்பு பிரிவு சப் இன்ஸ்பெக்டர் ஜாகிர் உசேன் தலைமையிலான போலீசார் மற்றும் பாகூர் போலீசார் நேற்று முன்தினம் அங்கு ரோந்து சென்றனர். பாகூர் அடுத்த ஆதிங்கப்பட்டு புறவழிச்சாலை சந்திப்பில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த 2 வாலிபர்களை பிடித்து சோதனை செய்தனர். சட்டை பாக்கெட்டில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது.விசாரணையில், பாகூர் பேட், புதுநகரை சேர்ந்த முகேஷ் ஷர்மா, 22; விழுப்புரம் மாவட்டம், மிட்டமண்டகப்பட்டு, புது காலனியைச் சேர்ந்த ஆதித்யன், 22, என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 366 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இது குறித்து பாகூர் போலீசார் வழக்கு பதிந்து, இருவரையும் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை