உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி சட்டசபை 11 நாட்கள் நடக்கும் சபாநாயகர் செல்வம் தகவல்

புதுச்சேரி சட்டசபை 11 நாட்கள் நடக்கும் சபாநாயகர் செல்வம் தகவல்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை 11 நாட்கள் நடக்கும் என, சபாநாயகர் செல்வம்தெரிவித்தார்.புதுச்சேரி சட்டசபை கூட்ட தொடர் கவர்னர் உரையுடன் நேற்று துவங்கியது. சட்டசபை கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து சபை அலுவலர் குழு கூட்டம் நடந்தது. பின், சபாநாயகர் செல்வம் கூறியதாவது;இன்று 1ம் தேதி கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானமும், பதிலுரையும் இருக்கும். 2ம் தேதி காலை 9:30 மணிக்கு நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார். 5 மற்றும் 6ம் தேதி பட்ஜெட் மீதான பொது விவாதம் நடக்கும். 7, 8 மற்றும் 9ம் தேதி மானிய கோரிக்கைகள் மற்றும் முன்மொழிதல் மீதான விவாதம் வாக்கெடுப்பு நடக்கும். 12ம் தேதி 13ம் தேதி அமைச்சர் முதல்வர்கள் பதில் உரையும், 14ம் தேதி தனி நபர் தீர்மானங்களுடன்சபை நிறைவு பெறுகிறது.கடந்த ஆண்டு எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை ஏற்று 17 நாட்கள் கூட்ட தொடர் நடந்தது. அதற்கு முந்தைய ஆண்டுகளில் 8 நாட்கள் நடந்தது.தற்போது 6 மாதத்திற்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால், அலுவல் ஆய்வு கூட்டத்தில் 11 நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது.சபை நடக்கும்போது அனைத்து துறை செயலர், தலைவர்கள் சபையில் இருக்க வேண்டும் என தலைமை செயலர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் ஆளும் அரசுடன் தலைமை செயலர் இணக்கமாக செயல்பட்டு, மாநில முன்னேற்றத்திற்கு தேவையான நடிக்கைஎடுத்து வருகிறார்.எம்.எல்.ஏ.,க்கள் நினைத்தால் காலை, மாலை என 24 மணி நேரமும் அவையை நடத்த தயாராக உள்ளோம். புதிய சட்டசபை கட்டும் கோப்பு கவர்னர் மாளிகையில்உள்ளது.புதிய கவர்னர் வந்தவுடன் இது தொடர்பாக பேசி ஒப்புதல் பெற்று மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை