மேலும் செய்திகள்
அறிவியல் கண்காட்சி
08-Nov-2025
வழிப்பறி வாலிபரிடம் போலீசார் விசாரணை
08-Nov-2025
பள்ளி மாணவிகள் கடத்தல் போக்சோவில் வாலிபர் கைது
08-Nov-2025
வந்தே மாதரம் நிகழ்ச்சி
08-Nov-2025
கலா உத்சவ் போட்டி
08-Nov-2025
நெட்டப்பாக்கம்: மடுகரை சோதனை சாவடியில் சீனியர் எஸ்.பி., நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.லோக்சபா தேர்தலையொட்டி, புதுச்சேரி மாநில எல்லைப்பகுதிகளில், சோதனை சாவடிகள் அமைத்து, பறக்கும் படை மற்றும் போலீசார் வாக்காளர்களுக்கு பணம், பரிசுபொருட்கள், மது, போதை பொருட்கள் கடத்தி செல்கின்றனரா என்பது குறித்து 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவுஇரவு 12:30 மணியளவில் சீனியர் எஸ்.பி., நார சைதன்யா மடுகரை மாநில எல்லையில் உள்ள சோதனை சாவடியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு பணியில் இருந்த போலீசாரிடம் கண்காணிப்பு பணியில் கவனமாக இருக்க வே்ணடும். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தவாறு செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.மேலும் தமிழகம் மற்றும் வெளி மாநிலத்தவர்கள் புதுச்சேரிக்கு வரும் போது சந்தேகப்படும் படியான நபர்கள் வந்தால் அவர்களின் முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும்' என்றார்.ஆய்வின் போது, எஸ்.பி., வம்சித்ரெட்டி, இன்ஸ்பெக்டர் கீர்த்தி வர்மன், நெட்டப்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
08-Nov-2025
08-Nov-2025
08-Nov-2025
08-Nov-2025
08-Nov-2025