| ADDED : மே 08, 2024 01:38 AM
திருக்கனுார்: திருக்கனுார் சுப்ரமணிய பாரதி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாநில அளவில் ஐந்தாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. இது குறித்து பள்ளியின் முதல்வர் சம்பத், துணை முதல்வர் சுசிலா சம்பத் ஆகியோர் கூறியதாவது: சுப்ரமணிய பாரதி மேல்நிலைப் பள்ளி 2023- - 24ம் கல்வியாண்டில் அதிகப்படியான மாணவர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதினர். அதில் மாணவி விக்னேஸ்வரி 600 க்கு 590 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் ஐந்தாம் இடமும், பள்ளி அளவில் முதலிடமும் பிடித்தார். மாணவி பிரியங்கா தேவி 587 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும், சமீரா பர்வீன் 583 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். பள்ளி அளவில் 550 மதிப்பெண்களுக்கு மேல் 10 மாணவர்களும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 52 மாணவர்களும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 54 மாணவர்களும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 31 மாணவர்களும் பெற்றுள்ளனர். தமிழ் பாடத்தில் 7 பேர் 99 ,கணித பாடத்தில் 2 பேரும். உயிரியல் பாடத்தில் இருவர் 95 மதிப்பெண்ணும், கணினி அறிவியல் பாடத்தில் 10 பேர் 100 மதிப்பெண்களும் பெற்றனர். வணிகவியல் பாடத்தில் 2 பேர் தலா 100 மதிப்பெண்கள், பெற்றுள்ளனர். கல்விப் பணியில் 35 ஆண்டுகள் அனுபவமிக்க நமது பள்ளி புதுச்சேரி மாநில அளவில் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்து வருகிறது. நகர்புற பள்ளிகளுக்கு இணையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. எல்.கே.ஜி முதல் எட்டாம் வகுப்பு வரை சி.பி.எஸ்.சி.இ., (NCERT) பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது. தொடர்ந்து நமது பள்ளியின் வெற்றிக்கு ஒத்துழைப்பு நல்கி வரும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.''