உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தேக்வோண்டோ போட்டி பரிசளிப்பு விழா

தேக்வோண்டோ போட்டி பரிசளிப்பு விழா

புதுச்சேரி,: புதுச்சேரி தேக்வோண் டோ விளையாட்டு சங்கம் (மேஜிக் லேக் தேக்வோண் டோ மார்ஷியல் ஆர்ட் கிளப்) சார்பில் மாநில அளவிலான குறுகி மற்றும் பும்சே போட்டிகள் நடந்தது.உப்பளம் ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கில் சப் ஜூனியர், கேடட், ஜூனியர் மற்றும் சீனியர் என பிரிவுகளில் போட்டி களில், அங்கீகரிக்கப்பட்ட கிளப் மாணவர்கள் 1000க் கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.போட்டியை புதுச்சேரி ஒலிம்பிக் சங்கத்தின் சி.இ.ஓ., முத்து கேசவலு, துணைத்தலைவர் கோபு ஆகியோர் துவக்கி வைத்தனர்.இந்திய தேக்வோண்டோ சம்மேளன இஸ்ரா ஸ்டாலின் முன்னிலை வகித்தார். புதுச்சேரி தேக்வோண்டோ சங்க தலைவர் ஸ்டாலின் தலைமை தாங்கினார். ஸ்டான்ஸ் போர்ட், பிரிட்டிஷ் மற்றும் கிரைஸ்ட் பள்ளி முதல்வர்கள் பிரீத்தி, அபிராமி, உமா மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர். டெக்னிக்கல் கமிட்டி சேர்மன் பகவத்சிங் வரவேற்றார். சங்க பொதுச் செயலாளர் மஞ்சுநாதன் நன்றி கூறினார். பரிசளிப்பு விழாவில் புதுச்சேரி சபாநாயகர் செல்வம் பங்கேற்று, வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.இதில், புதுச்சேரி ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச்செயலாளர் தனசேகரன், மணக்குள விநாயகர் கல்வி குழுமத்தின் செயலாளர் டாக்டர் நாராயணசாமி, அருணா கிளினிக்கல் லேப் அழகரசன், கார்த்திக் ராஜா, சண்முகம் உளளிட்ட பலர் கலந்து கொண்டனர்.மாநில அளவிலான போட்டியில் தேக்வோண்டோ மார்ஷியல் ஆர்ட் பள்ளி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றனர். மேஜிக் லேக் தேக்வோண்டோ மார்ஷியல் ஆர்ட் கிளப் இரண்டாம் இடத்தையும், பிரேவ் ஆர்ட் தேக்வோண்டோ கிளப் மூன்றாம் இடத்தையும் பிடித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை