உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தலைமை பொறியாளருக்கு தலைமை நீதிபதி பாராட்டு

தலைமை பொறியாளருக்கு தலைமை நீதிபதி பாராட்டு

புதுச்சேரி : புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமைபொறியாளரை பாராட்டி, தலைமை நீதிபதி நினைவுப் பரிசு வழங்கினார்.புதுச்சேரி ஒருங்கிணைந்த கோர்ட்டில் மொத்தம், 7 கோர்ட்டுகளின் திறப்பு விழா சமீபத்தில் நடந்தது. இந்த பணிகளை பொதுப்பணித்துறை சிறப்பாக மேற்கொண்டதாக, தலைமை நீதிபதி சந்திரசேகரன் தெரிவித்தார்.இதையடுத்து அவர், பொதுப்பணித்துறை தலைமைப்பொறியாளர் தீனதயாளன், கண்காணிப்பு பொறியாளர் வீரசெல்வம், செயற்பொறியாளர்கள் ராஜ கிருஷ்ணன், சுந்தர ராசு, உதவிப்பொறியாளர் தேவதாசு, இளநிலைப்பொறியாளர்கள் மாலைமணி, கார்த்திகேயன் ஆகியோரை அவரது அறைக்கு அழைத்தார்.அனைவருக்கும், தேனீர் விருந்தளித்து, பாராட்டி, நினைவுப்பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் நீதிபதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ