உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / களம் இறங்கிய கஞ்சா ராணிகள் ரூட்டை மாற்றிய கடத்தல் கும்பல்

களம் இறங்கிய கஞ்சா ராணிகள் ரூட்டை மாற்றிய கடத்தல் கும்பல்

'டிமிக்கி' கொடுத்து வரும் கஞ்சா ராணிகளையும் மடக்கினால், போதை நடமாட்டத்தை குறைக்கலாம்.புதுச்சேரியில் கஞ்சா, குட்கா, மாவா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனை அமோகமாக நடக்கிறது. சர்வ சாதாரணமாக உயர்ரக போதை பொருட்கள் கிடைக்கிறது.போதைப் பொருட்களை ஒழிக்க போலீசார் தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், கட்டுப்படுத்த முடியவில்லை. போதைப் பொருள் கடத்தல், விற்பனை கும்பல்கள், புற்றீசல் போல நாளுக்கு நாள் அதிகரித்து வருவது முக்கிய காரணமாக உள்ளது. கஞ்சா கடத்தலில் ஈடுபடும் ஆண்களை போலீசார் பொறி வைத்து பிடித்து சிறையில் தள்ளி வருகின்றனர். இதனால் உஷாரான கஞ்சா கடத்தல் கும்பல் தற்போது கடத்தல் ரூட்டை மாற்றியுள்ளது. யாருக்கும் சந்தேகம் வராதபடி 'கஞ்சா ராணி'களை களம் இறக்கி, வெளியூர்களில் இருந்து கஞ்சா கடத்தி வருகின்றனர்.இதுமட்டுமல்லாமல், கஞ்சா பொட்டல சில்லறை விற்பனையிலும் கஞ்சா ராணிகளை களம் இறக்கிவிட்டுள்ளனர். இதனால் புதுச்சேரியில் கஞ்சா நுழைவதையும், விற்பனையையும் தடுக்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர்.இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'கஞ்சா விற்பனையில் ஈடுபடும் பெண்களுக்கு, அவர்களது உடையே கவசமாக இருக்கிறது. கஞ்சாவை உடைகளில் ஒளித்து வைத்து இருப்பதால், பொது இடங்களில் எளிதில் சோதனை செய்ய முடியாது. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் கஞ்சா கும்பலை சேர்ந்தவர்கள், கஞ்சா ராணிகளை களம் இறக்கி உள்ளனர்.பெண்களிடம் சோதனை நடத்தினால், எங்கள் மீது பாலியல் புகார் கூறவும் தயங்க மாட்டார்கள். இதனால், கஞ்சா ராணிகளை ஜாக்கிரதையாக கையாள வேண்டியுள்ளது. கஞ்சா ராணிகளை கைது செய்ய வேண்டுமெனில், பெண் போலீசாருக்கு முக்கியத்துவம் கொடுத்து களத்தில் இறக்க வேண்டும்.அப்போது தான் கஞ்சா ராணிகளை எதிர்கொண்டு போதை நடமாட்டத்தை தடுக்க முடியும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை