| ADDED : மார் 28, 2024 04:28 AM
புதுச்சேரி : புதுச்சேரி லோக்சபா தொகுதியில் போட்டியிட, இளைஞரான சதீஷ்குமார், நேற்று வேட்பு மனுவை அளித்தார்.இது குறித்து அவர் கூறியதாவது: புதுச்சேரியில் மதுபானக்கடை நேரத்தை மாற்றுவதே முதல் குறிக்கோள். ஒரு மாநிலத்தின் எதிர்காலமே வகுப்பறையில் தான் தீர்மானிக்கப்படுகிறது. புதுச்சேரியில் மாணவர்கள் வரை மதுபான பழக்கம் வந்துவிட்டது. அதனால் மதுபான மற்றும் சாராய கடைகளின் நேரம் குறைக்கப்படும் .முதலில் அடிப்பை பிரச்னைகளை தீர்ப்பேன். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, தரமான கல்வி, தரமான மருத்துவம், வழங்கப்படும். புதுச்சேரியில் பிரதான வாய்க்கால்களை சுத்தம் செய்தல், ரேஷன் கடைகள் திறப்பது போன்ற பல்வேறு பிரச்னைகளை சரிசெய்வேன்.இவ்வாறு அவர் கூறினார்.