| ADDED : ஜூன் 11, 2024 05:45 AM
புதுச்சேரி: புதுச்சேரியை சேர்ந்தவர் பூமிதேவி, 80; பிரஞ்சு குடியுரிமை பெற்ற இவர் தனது பிள்ளைகளுடன் பிரான்சில் வசித்து வருகிறார். புதுச்சேரி ஏனாம் வெங்கடசலபதி பிள்ளை வீதியில் பூமிதேவிக்கு சொந்தமான காலி மனையில், கடந்த 2021ம் ஆண்டு 3 மாடி வீடு கட்டப்பட்டது. விசாரித்தபோது, வாணரப்பேட்டை சேர்ந்த சங்கரி வீடு கட்டி வருவது தெரிய வந்தது.இதுதொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் பூமிதேவி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், பூமிதேவி இடத்தில் கட்டப்பட்டுள்ள 3 மாடி கட்டடத்தை இடித்து அகற்ற உத்தரவிட்டது. புதுச்சேரி நகர அமைப்பு குழுமத்தினர், நேற்று காலை, போலீஸ் பாதுகாப்புடன் கட்டடத்தை இடிக்க சென்றனர். அப்போது சங்கரி தரப்பினர் தாங்களே வீட்டை இடித்து இடத்தை ஒப்படைப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து, அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர்.