உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆத்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான பயிற்சி முகாம்

ஆத்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான பயிற்சி முகாம்

திருக்கனுார்: திருக்கனுார் பண்ணை தகவல் மற்றும் ஆலோசனை மையம் சார்பில் ஆத்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான நீடித்த விவசாயம் குறித்த பயிற்சி முகாம் சோரப்பட்டு உழவர் உதவியகத்தில் நடந்தது.வேளாண் அலுவலர் தமிழ்ச்செல்வன் வரவேற் றார். மதகடிப்பட்டு வேளாண் துணை இயக்குனர் சாந்தி தலைமை தாங்கினார். மணக்குள விநாயகர் வேளாண் கல்லுாரி உதவி பேராசிரியர் ராஜேந்திர பிரசாத் மணிலா மற்றும் உளுந்து சாகுபடி குறித்து பேசினார்.காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய மண்ணியல் நிபுணர் பிரபு இயற்கை விவசாயம் மற்றும் மண் பரிசோதனை குறித்தும், நிபுணர் சித்ரா கால்நடை பராமரிப்பு குறித்தும் விளக்கம் அளித்தனர். சோரப்பட்டு, அதனை சுற்றியுள்ள கிராம விவசாயிகள் பங்கேற்றனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஜெயசந்திரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை