உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நாகாத்தம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் 

நாகாத்தம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் 

புதுச்சேரி கொட்டுப்பாளையம் நாகாத்தம்மன் கோவிலில், ஊஞ்சல் உற்சவம் நேற்று நடந்தது.கொட்டுப்பாளையம் இ.சி.ஆரில் நாகாத்தம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் 39ம் ஆண்டு சித்திரை மாத பிரமோற்சவ விழா கடந்த 12ம் தேதி காலை 10:30 மணிக்கு கொடியேற்றம் மற்றும் காப்புக்கட்டுதலுடன் துவங்கியது.இதையொட்டி, கடந்த 17ம் தேதி நாகாத்தம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், மதியம் 1:00 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, நேற்று முன்தினம் (18 ம் தேதி) இரவு 7:00 மணிக்கு அம்மன் சிறப்பு மின் அலங்காரத்தில் மஞ்சள் நீர் வீதியுலா நடந்தது.முக்கிய நிகழ்வாக, நேற்று இரவு 8:00 மணிக்கு நாகாத்தம்மன் சிறப்பு அலங் காரத்தில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை