உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வம்புபப்பட்டு கோவிலில் ஊஞ்சல் உற்சவம் 

வம்புபப்பட்டு கோவிலில் ஊஞ்சல் உற்சவம் 

திருக்கனுார்: வம்புப்பட்டு முத்து மாரியம்மன் கோவிலில், சுவாமி ஊஞ்சல் உற்சவம் நடந்தது.புதுச்சேரி, திருக்கனுார் அடுத்த வம்புப்பட்டு கிராமத்தில் முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் செடல் உற்சவம் கடந்த 19ம் தேதி ஐய்யனாரப்பன் கோயிலில் ஊரணி பொங்கலுடன் துவங்கியது.இதையொட்டி, முத்து மாரியம்மன் கரகம் வீதியுலா, சாகை வார்த்தல், சிவன் - பார்வதி திருக்கல்யாண உற்சவம் நடந்தது.தொடர்ந்து, அம்மனுக்கு பால், தயிர், இளநீர், விபூதி, சந்தனம், பன்னீர், உள்ளிட்ட 9 வகையான வாசனை திரவியங்கள், மலர்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டு சுவாமி வீதி உலா நடந்தது.முக்கிய நிகழ்வாக முத்து மாரியம்மன் ஊஞ்சல் உற்சவம் நேற்று நடந்தது. இதில், அம்மனுக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, ஊஞ்சல் உற்சவம் நடந்தது. வம்புப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்