உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பணம், பரிசு பொருட்கள் கொடுத்தால் வாக்காளர்கள் புகார் தெரிவிக்கலாம்

பணம், பரிசு பொருட்கள் கொடுத்தால் வாக்காளர்கள் புகார் தெரிவிக்கலாம்

புதுச்சேரி: வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுத்தால் புகார் தெரிவிக்கலாம் என தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் சிவிஜில்(cVIGIL) என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.தேர்தல் நேரத்தில் ஓட்டு சேகரிப்பின் போது யாராவது ஓட்டுக்கு பணம், பரிசுப்பொருட்கள் வழங்கினால் அதனை புகைப்படம், வீடியோ எடுத்து இச்செயலி மூலம் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யலாம்.புகார் அளிப்பவர்கள் குறித்த விவரங்கள் ரகசியம் காக்கப்படும்.இதேபோல், தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ள 1950 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தேர்தல் விதிமுறை மீறல் புகார்களை தெரிவிக்கலாம்.புதுச்சேரி, மாகி, ஏனாம் பிராந்தியங்களில் உள்ளவர்கள் 9488111950 என்ற எண்ணிலும், காரைக்கால் பிராந்தியத்தில் உள்ளவர்கள் 89036-91950 என்ற எண்ணிலும் வாட்ஸ் ஆப்பிலும் புகார் தெரிவிக்கலாம்.மேலும் ceo-eci.gov.inமற்றும் eci.gov.inஎன்ற இ-மெயிலிலும் புகார் தெரிவிக்கிலாம். இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை