உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பொது இடத்தில் ரகளை 15 வாலிபர்கள் கைது

பொது இடத்தில் ரகளை 15 வாலிபர்கள் கைது

புதுச்சேரி: பொது இடத்தில் ரகளை செய்த 15 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். முதலியார்பேட்டை  சப் இன்ஸ்பெக்டர் தெய்வசிகாமணி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.   அப்போது முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்த மணிகண்டன் 27, என்பவர் மது போதையில், 100 சாலை மேம்பாலம் பகுதியில் நின்று கொண்டு அவ்வழியாக சென்ற பொதுமக்களை பார்த்து ஆபாசமாக பேசிக்கொண்டு ரகளையில் ஈடுப்பட்டார். அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். . இதேபோல் பொது இடத்தில் மதுபோதையில் ரகளை செய்த திருக்கனூர் விஷ்ணு பிரசாந்த் 33,  நோணாங்குப்பம் காசிநாதன் 47, குமாரப்பாளையம் பாண்டியன் 43, உப்பளம் ஜான் ஆடம்ஸ் 35, அரியாங்குப்பம் ஆனஸ்ட்ராஜ் 30, கடலூர் இளையராஜா 49,  சுனிதா குமார் 25, தியாகராஜன் 65, சிவா 32, விழுப்புரம் சுகுமார் 18,  அஜித் 24, நேதாஜி 26,  அருண்குமார் 34, அய்யப்பன் 38, மணிகண்டன் 28 15 பேரை அந்தந்த பகுதி போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி