உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போலீஸ் மக்கள் மன்றத்தில் 16 புகார்களுக்கு தீர்வு

போலீஸ் மக்கள் மன்றத்தில் 16 புகார்களுக்கு தீர்வு

புதுச்சேரி: ஒதியஞ்சாலை போலீஸ் ஸ்டேஷனில், நடந்த மக்கள் மன்றம் நிகழ்ச்சியில், டி.ஐ.ஜி., ராஜேந்தர் குமார் குப்தா, சீனியர் எஸ்.பி., கலைவாணன் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.  புதுச்சேரி போலீஸ் நிலையங்களில் டி.ஜி.பி., ஷாலினி சிங் அறிவுறுத்தலின்படி, மக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்யும் வகையில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஒதியஞ்சாலை போலீஸ் ஸ்டேஷனில் நடந்த மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் டி.ஐ.ஜி., ராஜேந்தர் குமார் குப்தா, சீனியர் எஸ்.பி., கலைவாணன், ஐ.பி.எஸ்., அதிகாரி அனுராக் சோப்ரா ஆகியோர் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர்.  இதேபோல், போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனில் சீனியர் எஸ்.பி., திவ்யா, எஸ்.பி.,க்கள் ரச்னா சிங், பக்தவாசலம், மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., வம்சீதர செட்டி, திருபுவனையில் எஸ்.பி., சுப்ரமணியன், தவளக்குப்பத்தில் எஸ்.பி., ஜிந்தா கோதண்டராமன், ஆகியோர் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்தனர்.  இதில், பொது மக்களிடம் இருந்து 50 புகார்கள் பெறப்பட்டு, 16 புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. நிலுவையில் உள்ள புகார்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க, நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை