| ADDED : செப் 15, 2026 05:52 PM
புதுச்சேரி: கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி செயிண்ட்பால்பேட் அருகில் உள்ள அங்கன்வாடி பகுதியில் 3 நபர்கள் கத்தி வைத்து அவ்வழியாக செல்பவர்களை மிரட்டுவதாக போலீசாருக்கு புகார் வந்தது. அதையடுத்து டி.நகர் போலீசார் அங்கு சோதனை நடத்தினர். போலீசாரை கண்டதும் 3 பேரும் தப்பிக்க முயற்சித்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். கொட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த பிரேம்குமார், 22; கருவடிக்குப்பம் ஜான் (எ) ராமன், 22; லாஸ்பேட்டை கிருபானந்தம், 21, ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து, கத்தியை போலீசார் பறிமுதல் செய்து, மூவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.