| ADDED : டிச 01, 2025 04:46 AM
புதுச்சேரி: ஏனாம் பகுதியில் மினி லாரியில் குட்கா பொருட்களை கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர். ஏனாம், இந்திரா சதுக்கம் அருகே சப்- இன்ஸ்பெக்டர் புனிதராஜ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த மினி லாரி ஒன்றினை, மறித்து போலீசார் ஆவணங்களை கேட்டனர். அதற்கு மினிலாரி டிரைவரும், உரிமையாளருமான ரமேஷ், 38, முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் லாரியை சோதனையிட்டனர். அதில் பெட்டி, பெட்டியாக தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து ரமேஷ் மீது போலீசார் வழக்குப் பதிந்து, கைது செய்தனர். மினி லாரியில் இருந்த 500 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில் விசாகப்பட்டினத்தில் இருந்து விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.