உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஒப்பந்த அடிப்படையில் வேலை தருவதாக அரசியல் பிரமுகரிடம் ரூ. 60 லட்சம் மோசடி

ஒப்பந்த அடிப்படையில் வேலை தருவதாக அரசியல் பிரமுகரிடம் ரூ. 60 லட்சம் மோசடி

புதுச்சேரி: ஒப்பந்தம் அடிப்படையில் வேலை எடுத்து தருவதாக அரசியல் பிரமுகரிடம் ரூ. 60 லட்சம் மோசடி செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி வினோபா நகரை சேர்ந்தவர் கலைமாறன், 56; இவர், பகுஜன் சமாஜ் கட்சியில் மாநில தலைவராக இருந்தார். இவரிடம் நண்பராக பழகிய புதுச்சேரியை சேர்ந்த அர்ஜூணன் என்பவர் சென்னை விமான நிலையத்தில், ஏ.ஏ.ஐ., பணியாளர் சங்கம் மூலம், தோட்டம் பராமரிப்பு, பார்க்கிங், கேண்டீன் ஆகியவற்றை ஒப்பந்த அடிப்படையில் வேலை பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாக கலைமாறனிடம் கூறினார். அதை நம்பி, கலைமாறன் கடந்த ஆண்டு, பல தவணைகளில் டி.டி., மூலம் ரூ. ௬௦ லட்சத்தை ராஜ்குமார் என்பவருக்கு வழங்கினார். அதன் பின்னர் அர்ஜூணன், ஒப்பந்தம் தொடர்பாக வேலை நடந்து வருவதாக கூறினார்.அதன் பிறகு அர்ஜூணனிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை.அவரது மொபைலும் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது.இதுகுறித்து கலைமாறன் கொடுத்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை