| ADDED : பிப் 09, 2024 05:49 AM
புதுச்சேரி: சாரதா கங்காதரன் கல்லுாரிக்கு புதுச்சேரி அரசின் தேர்தல் துறை விருது வழங்கப்பட்டது.புதுச்சேரி அரசின் தேர்தல் துறை சார்பில், 14வது தேசிய வாக்காளர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட அனைத்து உயர்கல்வி நிறுவனங்களில் சாரதா கங்காதரன் கல்லுாரி அதிக எண்ணிக்கையில் புதிய வாக்காளர்கள் பதிவு செய்து, தேர்தல் விழிப்புணர்வு நடத்தியதற்காக, கணினி பயன்பாட்டுத் துறை உதவி பேராசிரியர் பிரகாஷிற்கு மாநில அளவில் சிறந்த நோடல் அதிகாரி விருது வழங்கப்பட்டது.தொடர்ந்து, தேர்தல் மற்றும் வாக்காளர்களின் பங்களிப்பு குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன. சிறந்த விளையாட்டு வீரருக்கான விருது கல்லுாரி, கணினி பயன்பாட்டுத் துறை மாணவர் முகேஷிற்கு வழங்கப்பட்டது.தேர்தல் பதிவு அதிகாரி ராகினி, புதிய வாக்காளர்களுக்கு தேர்தல் மற்றும் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார். விருது பெற்ற உதவி பேராசிரியர் பிரகாைஷ கல்லுாரி துணைத் தலைவர் பழனி ராஜா, கல்லுாரி முதல்வர் உதயசூரியன் மற்றும் பேராசிரியர்கள் வாழ்த்தினர்.