உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பைக் ஷோரூம் மேலாளர் தற்கொலை

பைக் ஷோரூம் மேலாளர் தற்கொலை

அரியாங்குப்பம்: பைக் ேஷாரூமின் மேலாளர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வேலுார், பாகாயம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்பாபு,50; புதுச்சேரி தனியார் பைக் ேஷாரூமில் மேலாளராக பணி செய்து வந்தார். அரியாங்குப்பத்தில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். வெளியில் பணம் கடன் வாங்கியதை அடைக்க முடியாமல் இருந்ததால், கணவன் மனைவிக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. கணவரிடம் கோபித்து கொண்டு, இவரது மனைவி ஜானகி, மகளை அழைத்து கொண்டு சொந்த ஊரான வேலுாருக்கு சென்றுவிட்டார். இந்நிலையில், கடன் கொடுத்தவர்கள் செந்தில்பாபுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்தனர். இதனால் மனஉளைச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில் செந்தில்பாபு வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி ஜானகி புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை