உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கால்நடை, கோழிகள் கண்காட்சி பரிசளிப்பு

கால்நடை, கோழிகள் கண்காட்சி பரிசளிப்பு

நெட்டப்பாக்கம் : மடுகரையில் கால்நடை மற்றும் கோழிகள் கண்காட்சி நேற்று நடந்தது.கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை சார்பில், கால்நடை, கோழிகள் கண்காட்சி மற்றும் பரிசளிப்பு விழா மடுகரை சிவன் கோவில் வளாகத்தில் நடந்தது.நிகழ்ச்சிக்கு, துறை இயக்குனர் லதா மங்கேஸ்வர் வரவேற்றார். சிறப்பு அழைப்பளராக துணை சபாநாயகர் ராஜவேலு கலந்து கொண்டு, கண்காட்சியில் இடம்பெற்ற சிறந்த கால்நடைகள் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் துணை இயக்குனர் குமாரவேல் உள்ளிட்ட பல கால்நடை மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.கரியமாணிக்கம் கால்நடை உதவி மருத்துவர் சிவசங்கரி நன்றி கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ