| ADDED : மார் 07, 2024 04:20 AM
காரைக்கால் : காரைக்காலில் செக் மோசடி வழக்கில் அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,வுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.காரைக்கால், திருப்பட்டினத்தை சேர்ந்தவர் பாலகுரு. இவரிடம், காரைக்காலை சேர்ந்த அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., அசனா கடந்த 2008ம் ஆண்டு ரூ.30 லட்சம் கடன் வாங்கியிருந்தார். அதன்பிறகு அசனா, கடன் தொகைக்காக ரூ.15 லட்சம் மதிப்பில் இரண்டு 'செக்'கை பாலகுருவிடம் கொடுத்தார். பாலகுரு, அந்த செக்கை வங்கியில் செலுத்தியபோது, பணம் இல்லாமல் திரும்பியது.இதுதொடர்பாக பாலகுரு கொடுத்த புகாரின் பேரில், காரைக்கால் போலீசார், முன்னாள் எம்.எல்.ஏ., அசனா மீது காரைக்கால் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த நீதிபதி வரதராஜன், செக் மோடி செய்த முன்னாள் எம்.எல்.ஏ., அசனாவிற்கு ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.30 லட்சத்தை திருப்பி செலுத்த உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.