உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பள்ளிகள், கல்லுாரிகளில் போதை கண்காணிப்பு குழு  கவர்னர் தமிழிசை உத்தரவு

பள்ளிகள், கல்லுாரிகளில் போதை கண்காணிப்பு குழு  கவர்னர் தமிழிசை உத்தரவு

புதுச்சேரி, : புதுச்சேரி போலீஸ் துறை, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுடன்ஆலோசனைக் கூட்டம் கவர்னர் மாளிகையில் நடந்தது.கவர்னர் தமிழிசை தலைமை தாங்கினார். உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், தலைமைச் செயலர் சரத் சவுகான், டி.ஜி.பி., ஸ்ரீநிவாஸ், அரசு செயலர்கள் ஆஷிஷ் மாதவராவ் மோரே, முத்தம்மா, கேசவன், வல்லவன், ஐ.ஜி., சின்ஹா, சீனியர் எஸ்.பி.,கள்., எஸ்.பி.,கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் கவர்னர் தமிழிசை பிறப்பித்த உத்தரவு:சிறுமி கொலையில் தவறான செய்திகள் பரப்பப்படுகிறது. பொது மக்களுக்கு அரசு நிர்வாகத்தின் மீது நம்பிக்கை ஏற்படும் வகையில் நம்முடைய செயல்பாடுகள் இருப்பதை மக்களுக்கு எடுத்து கூற வேண்டும்.24 மணி நேரமும் செயல்படக்கூடிய போதை மறுவாழ்வு மையங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், சுகாதார மையங்களிலும் போதை பொருள் தடுப்பு ஆலோசனை வழங்கப்பட வேண்டும்.பள்ளிகள், கல்லுாரிகள் மற்றும் இதர நிறுவனங்களில் முதல்வர்கள் தலைவர்கள் ஆகியோரை உள்ளடக்கிய கண்காணிப்பு குழுக்கள் அமைத்து இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க வேண்டும்.போதைப் பொருள் தடுப்புப் பிரிவு செயல்பாடுகளை தீவிர படுத்த வேண்டும். கூடுதலான எண்ணிக்கையில் காவல்துறை அதிகாரிகளை ஈடுபடுத்த வேண்டும். போதை பொருள் புதுச்சேரிக்குள் கொண்டு வரப்படுவதை தடுக்க வேண்டும். மாநில எல்லைகளில் போதை பொருள் தடுப்பு கண்காணிப்பை தீவிர படுத்த வேண்டும்.போதைப் பொருள் தடுப்பு பிரிவில் கூடுதல் அதிகாரிகளை நியமித்து வலுப்படுத்தி பறக்கும் படைகளை அமைக்க வேண்டும்.இவ்வாறு கவர்னர் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை