மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
4 hour(s) ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
4 hour(s) ago
புதிய தெரு மின் விளக்கு எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
4 hour(s) ago
வில்லியனுார் : ஊசுடு தொகுதி தி.மு.க.,சார்பில் பிள்ளையார்குப்பத்தில் சமத்துவ பொங்கல் விழாவை எதிர்க்கட்சித் தலைவர் சிவா துவக்கிவைத்தார்.ஊசுடு தொகுதி தி.மு.க சார்பில் பிள்ளையார்குப்பம் கூத்தாண்டவர் கோவில் திடலில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவிற்கு தொகுதி செயலாளர் இளஞ்செழியப்பாண்டியன் தலைமை தாங்கினார்.மாநில தலைமைச் செயற்குழு உறுப்பினர் லோகையன், மாநில நிர்வாகிகள் மதிவாணன், உத்திராபதி, விஜி, கலியமூர்த்தி, தேவநாதன், சுமித்ரா, அய்யனார், முருகையன், கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ., மூர்த்தி வரவேற்றார். தமிழர் பண்பாடு, கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் கிராமிய இசையான, மயிலாட்டம், ஒயிலாட்டத்துடன் 300க்கும் மேற்பட்ட மகளிர்களுக்கு மாநில தி.மு.க., அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., பரிசு பொருட்களை வழங்கி சமத்துவ பொங்கல் விழாவை துவக்கிவைத்தார்.இந்நிகழ்ச்சியில் அவைத் தலைவர் எஸ்.பி. சிவக்குமார், எம்.எல்.ஏ.,க்கள் அனிபால்கென்னடி, செந்தில்குமார், சம்பத், மாநில நிர்வாகிகள் குமார், தைரியநாதன், சண்குமரவேல், சரவணன், கோபால், கார்த்திகேயன், ராமசாமி, செல்வநாதன், சக்திவேல், தொகுதி செயலாளர்கள் திராவிடமணி, சக்திவேல், சீத்தாராமன், அரிகிருஷ்ணன், நடராஜன், மணிகண்டன், அசோக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.விழா ஏற்பாடுகளை மாநில தி.மு.க., மற்றும் ஊசுடு தொகுதி நிர்வாகிகள் செய்தனர்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago